750 மாணவ,மாணவிகளுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி

திருப்பூர்,செப்.21: திருப்பூர் மாவட்ட மாணவர்களுக்கு நாளை மறுநாள் முதல் நீட் தேர்வுக்கான பயிற்சி முகாம் துவங்கவுள்ளது.மத்திய அரசின் நீட், ஜே.இ.இ., போட்டி தேர்வுகளுக்கு தமிழக மாணவர்களின் நலன் கருதி  ஒவ்வொரு மாவட்டத்திலும் நீட் தேர்வு பயிற்சி அளிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. திருப்பூர், மாவட்டத்தில் தகுதி தேர்வு அடிப்படையில், பிளஸ் 1 படிக்கும், 233 பேர் மற்றும் பிளஸ் 2 படிக்கும் 517 பேர் என மொத்தம் 750 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, வரும் நாளைமறுநாள் (23ம் தேதி) ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி, கே.எஸ்.சி., அவிநாசி, ஊத்துக்குளி, காங்கயம், இடுவம்பாளையம், வெள்ளகோவில், பெதப்பம்பட்டி, மூலனுார், குண்டடம், உடுமலை மற்றும் பல்லடம் ஆகிய பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தாராபுரம் என்.சி.பி., பள்ளி ஆகிய 13 மையங்களில் பயிற்சி வகுப்பு துவங்குகிறது. காலாண்டு தேர்வு விடுமுறை என்பதால் வரும் 2ம் தேதி வரை தொடர்ந்து பயிற்சி நடக்கிறது. பள்ளி துவங்கிய பின் வாரத்தின் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடக்கிறது.

Related Stories: