சங்கமம் கல்லூரி சார்பில் என்எஸ்எஸ் முகாம்

விழுப்புரம், செப். 21: விழுப்புரம் அன்னமங்கலம் ஹீராசந்தின் சங்கமம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் என்எஸ்எஸ் முகாம் இல்லோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. கல்லூரி முதல்வர் அல்லாபிச்சை தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமையாசிரியர் மோகன்குமார் அனைவரையும் வரவேற்றார். இந்த முகாமில் 100 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு, பள்ளியில் உள்ள முட்புதர் மற்றும் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். என்எஸ்எஸ் முகாம் அமைப்பாளர் உதவி பேராசிரியர் மோகன் நன்றி கூறினார்.

Related Stories: