×

கமுதி துணை மின் நிலையத்தில் பணியாளர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி

கமுதி, செப்.19:  கமுதி கோட்டைமேட்டில் உள்ள துணை மின் நிலையத்தில் பணியாளர்களுக்கு மின் பாதுகாப்பு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. பரமக்குடி செயற்பொறியாளர் ராஜேந்திரன் தலைமையில் இந்த பயிற்சி நடத்தப்பட்டது. இதில் உதவி செயற்பொறியாளர்கள் சிராஜுதீன், ஜோசப் செல்வராஜ் மற்றும் உதவி மின் பொறியாளர்கள் மலைச்சாமி, முருகன், அனுசுயா, மாலதி ஆகிய பணியாளர்களுக்கு மின் பாதுகாப்பு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு பற்றி விரிவாக எடுத்துக் கூறினர். இதில் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கமுதிஉதவி செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் செய்திருந்தார்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை