கள்ளக்குறிச்சி அரசு கலை கல்லூரிக்கு ேடபிள், பெஞ்ச்

கள்ளக்குறிச்சி, செப். 19:   கள்ளக்குறிச்சி திருவள்ளுவர் பல்கலைக்கழக அரசு மற்றும் கலைக்கல்லூரியில் மாணவர்களுக்கு போதுமான அளவில் டேபிள், பெஞ்ச் இல்லாததால் தரையில் அமர்ந்து மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த கல்லூரிக்கு கூடுதலாக டேபிள், பெஞ்ச் வழங்கிட கல்லூரி நிர்வாகம் மற்றும் மாணவ, மாணவிகள் பிரபு எம்எல்ஏவிடம் வலியுறுத்தினர். அதன்படி கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாடு பொதுநிதியில் இருந்து ரூ.15 லட்சம் மதிப்பில் 150 டேபிள், பெஞ்ச் வழங்கும் விழா நடந்தது. அரசு கல்லூரி முதல்வர் முத்துசாமி தலைமை தாங்கினார். துறைத்தலைவர்கள் சங்கீதா, தங்கசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அம்மா மக்கள் முன்னேற்ற கழக தகவல் தொழில்நுட்ப மாநில செயலாளர் பிரபு எம்எல்ஏ கல்லூரிக்கு 150 டேபிள், பெஞ்ச் வழங்கி பேசினார்.  இதில் தெற்கு மாவட்ட செயலாளர் கோமுகிமணியன், மாவட்ட பிற அணி செயலாளர்கள் பால்ராஜ், சீனுவாசன், வஜ்ஜிரவேல், முகமது, சம்பத், நகர செயலாளர் ஜெயபிரகாஷ், ஒன்றிய செயலாளர் மதுசூதனன், நிர்வாகிகள் கல்லை ரமேஷ், பழனிவேல், தனலட்சுமி, சாந்தி, ராஜ்குமார் மற்றும் விரிவுரையாளர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.  

Related Stories: