இடி விழுந்து கரும்பு பயிர் சேதம்

சின்னசேலம், செப். 12: சின்னசேலம் அருகே வயலில் இடி விழுந்ததில் கரும்புகள் எரிந்து சேதம் அடைந்தன.விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி, சின்னசேலம் தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு சூறாவளி காற்றுடன் லேசான மழை பெய்தது. அப்போது அக்கராயபாளையம் நெல்லிக்குளம் அருகே உள்ள அந்தோணிசாமி க்கு சொந்தமான கரும்பு வயலில் பலத்த சத்தத்துடன் இடி விழுந்தது. இதனால் கரும்பு வயல் தீப்பிடித்து, சுமார் அரை ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு பயிர் தீயில் எரிந்து சேதமடைந்தது.

இதுகுறித்து கள்ளக்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பர

பரப்பு ஏற்பட்டது.

Related Stories: