திமுக தலைவர் கருணாநிதி மறைவு அனைத்து கட்சியினர் அமைதி ஊர்வலம்

சிவகங்கை, ஆக. 14: சிவகங்கையில் அனைத்துக்கட்சி சார்பில் திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அமைதி ஊர்வலம், அஞ்சலி கூட்டம் நடந்தது. திருப்பத்தூர் சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து தொடங்கிய அமைதி ஊர்வலம், காந்தி வீதி, நேரு பஜார் வழியாக அரண்மனைவாசல் சண்முகராஜா கலையரங்கம் வந்தடைந்தது. அங்கு அஞ்சலி கூட்டம் நடந்தது. திமுக மாவட்ட செயலாளர் பெரியகருப்பன் எம்எல்ஏ தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் தென்னவன், காங்கிரஸ் சட்டமன்ற குழுத்தலைவர் கேஆர்.ராமசாமி எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏக்கள் ராமஅருணகிரி, ராஜசேகரன், சுந்தரம், குணசேகரன், திமுக சார்பில் மாவட்ட துணை செயலாளர்கள் சேங்கைமாறன், மணிமுத்து, மகளிரணி அமைப்பாளர் பவானிகணேசன், நகர செயலாளர் துரைஆனந்த், முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளர் பள்ளத்தூர் ரவி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, சிபிஎம் மாவட்ட நிர்வாகி கந்தசாமி, சிபிஐ நகர் செயலாளர் ராஜேஸ், மதிமுக மாவட்ட செயலாளர் செவந்தியப்பன், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர்கள் சங்குஉதயக்குமார், திருமொழி, திக மாவட்ட நிர்வாகி இன்பலாதன் மற்றும் பாஜ, மமக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

மணல் அள்ளுவதில்தான் மும்முரம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் வீரபாண்டி கூறுகையில், ‘‘ஆண்டுதோறும் பெரியாறு, வைகை இரண்டின் மூலம் பலன்பெறும் மற்ற மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால் சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கான நீர் கிடைக்கிறது. ஆனால் சிவகங்கை மாவட்டத்திற்கு கிடைக்கவில்லை. இதனால் விவசாயம் பாதிக்கப்படும் நிலையோடு, கண்மாய்களில் நீர் தேக்கம் இல்லாமல் நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது. விவசாயிகள் வலியுறுத்தலால் கடைசி நேரத்தில் சம்பிரதாயத்திற்காக எடுக்கப்படும் நடவடிக்கையால் எவ்வித பலனும் இல்லை. வைகையில் தற்போது 62 அடி நீர் உள்ளது. 70 அடி அணையின் முழு கொள்ளளவு. அணை நிரம்ப இன்னும் 8 அடி மட்டுமே உள்ளது. எனவே நீர் வீணாக கடலில் கலப்பதற்கு முன் வறட்சி மாவட்டமான சிவகங்கைக்கு நீர் திறக்க மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆற்றில் மணல் அள்ளுவதிலும், மணல் குவாரி அமைப்பதிலும் முழு கவனம் செலுத்தப்படுகிறது. ஆனால் வறட்சியால் விவசாயம் பாதிக்கப்படும் நிலையிலும் நீர் திறக்க நடவடிக்கை இல்லை. இது கண்டிக்கத்தக்கது. பெரியாறு, வைகையில் இம்மாவட்டத்திற்கான நீர் பெற உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்’’ என்றார்.

Related Stories: