தேன்கனிக்கோட்டை, ஆக. 14: தளி அருகே பேளகொண்டப்பள்ளி கூட்டுறவு சங்க தேர்தலில் திமுகவை சேர்ந்தவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவர் மேற்கு மாவட்ட செயலாளரிடம் வாழ்த்து பெற்றார். கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே பேளகொண்டப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர், துணை தலைவர் தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இதில் திமுகவை சேர்ந்த கொமாரணப்பள்ளி ராஜசேகரரெட்டி தலைவராகவும், அதிமுகவை சேர்ந்த கொத்தஜிகூர் சென்னகிருஷ்ணாரெட்டி துணை தலைவராகவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.