தேங்கி கிடந்த குப்பைகள் அகற்றம்

கள்ளக்குறிச்சி, ஆக. 14: கள்ளக்குறிச்சி நகராட்சி 3வது வார்டுக்கு உட்பட்ட கேபிஆர் நகர் பகுதியில் வசித்து வரும் மக்கள், அச்சாலையின் ஓரமாக குப்பைகளை கொட்டி வந்தனர். இதனால் அப்பகுதி அசுத்தமாகி தொற்று நோய் பரவும் நிலை ஏற்பட்டது. அந்த இடத்தில் குப்பைகளை சேகரித்து எடுத்து செல்லும் விதமாக நகராட்சி நிர்வாகத்தின் மூலம் இரும்பு குப்பை பெட்டி ஒன்று ஏற்கனவே வைக்கப்பட்டு இருந்தது அந்த பெட்டியில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வந்தனர். நகராட்சி ஊழியர்கள் குப்பைகளை அகற்றி வந்தனர். ஆனால், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் மினிடேங்க் பகுதியில் மக்கள் குடியிருப்பு அருகே சாலையின் ஓரமாக அழுகிய காய்கறிகள், குப்பைகளை மக்கள் கொட்டி வருகின்றனர். தேங்கி கிடக்கும் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி கிடந்தது. இது தொடர்பான செய்தி தினகரன் நாளிதழில் படத்துடன் வெளியானது. இதன் எதிரொலியாக குவிந்து கிடந்த குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றி, அப்பகுதியில் பிளீச்சிங் பவுடர் தெளித்தனர். துரித நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories: