திருக்கோவிலூர் பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்திய 17 மாட்டுவண்டிகள் பறிமுதல்

திருக்கோவிலூர், ஆக. 14: திருக்கோவிலூர் பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்திய 17 மாட்டுவண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.திருக்கோவிலூர் பகுதியில் தென்பெண்ணையாற்றில் அனுமதியின்றி மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதாக மாவட்ட எஸ்பிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில் டிஎஸ்பி மகேஷ் மேற்பார்வையில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது மணலூர்பேட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக சு.கள்ளிப்பாடி கிராமத்தை சேர்ந்த அரிகிருஷ்ணன் (23), ராஜீவ்காந்தி (30), சக்திவேல் (30), ஏகாம்பரம் (30), விக்னேஷ் (23) ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து 5 மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்தனர்.

அரகண்டலூர் காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மணல் கடத்தலில் ஈடுபட்ட குடமுருட்டி ஆனந்த் (32), குமார் (47), தரன் (32), பிரேஷ்தெபன் (32), காளியப்பன் (17), பில்ராம்பட்டு கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (37), லட்சுமணன் (30), புருஷோத்தமன் (32), அன்பு (35) ஆகிய 9 பேர் மீது வழக்குப்பதிந்து அவர்களிடமிருந்து 9 மாட்டுவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.திருக்கோவிலூர் காவல்நிலையத்துக்கு உட்பட்ட தென்பெண்ணையாற்றில் மணல் கடத்திய கீழையூர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (35), பிரபாகரன் (25, சந்துரு (21) ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து 3 மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்தனர்.

Related Stories: