அம்பை மினி சூப்பர் மார்க்கெட் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

அம்பை, ஆக. 13: அம்பையில்  மினி சூப்பர் மார்க்ெகட் நிர்வாகிகளுக்கான தேர்தல் ஏப். 27ம் தேதி நடந்தது.  கடந்த 7ம் தேதி இதன் முடிவுகள் வெளியாகின. இதில் போட்டியின்றி  தேர்வுசெய்யப்பட்ட சங்கரலிங்கம் தலைவராகவும்,  முருகேசன் என்ற அசோக் துணைத்தலைவராகவும் பதவி ஏற்றனர். முத்துராமன், ஜான்  ஆப்ரகாம், வின்சென்ட் பாக்கியநாதன், மாடசாமி, தனலட்சுமி, சண்முகவள்ளி  மற்றும் ஆனந்த பிச்சம்மாள் ஆகியோர் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக  பதவி  ஏற்றனர். விழாவில் முன்னாள் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: