அம்பையில் இலவச மருத்துவ முகாம்

அம்பை, ஆக. 13: அம்பையில் நகர வியாபாரிகள் சங்கம், குலசேகரம்  மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. இதில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.அம்பை ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நகர வியாபாரிகள் சங்கம், குலசேகரம் மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. முகாமை நகர வியாபாரிகள் சங்கத் தலைவர் காந்தி தலைமை வகித்து துவக்கிவைத்தார். செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் சுப்புராமன், துணைத்தலைவர் பண்ணை சந்திரசேகரன், அரிமா சங்க தலைவர் குபேரன் ராஜா முன்னிலை வகித்தனர். வணிகர் சங்கங்கங்களின் மாநில துணைத்தலைவர் மார்ட்டின் வரவேற்றார்.

முகாமில் பங்கேற்ற மக்களுக்கு குலசேகரம் மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பொது அறுவை சிகிச்சை நிபுணர் ஆனந்தராஜ் தலைமையில் டாக்டர்கள் ஆனந்த், நியூகலா, கிங்ஸ்லி, அனிஷா, கிருஜா, ஆஷிகா, மலர்விழி உள்ளிட்ட  அனைத்து பிரிவு டாக்டர்கள் மற்றும் மருத்துவ கல்லூரி ஒருங்கிணைப்பாளர் நடராஜன் உள்ளிட்ட 50 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு மருத்துவ சிகிச்சை அளித்தனர். மேலும் மருத்துவ ஆலோசனை வழங்கியதோடு நோயாளிகளுக்கு இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கினர். முகாமில் அம்பை மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த குழந்தைகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர். இதில் வியாபாரிகள் சங்க துணைத்தலைவர் அரிகரன், துணைச் செயலாளர்கள் ராஜா, நடராஜன், மாரியப்பன், செயற்குழு உறுப்பினர் பிச்சையா, வெங்கடேஷ், சுப்பிரமணியன், காசிநாதர் கோயில் ராஜ கோபுர திருப்பணி குழு தலைவர் வாசுதேவராஜா, ரோட்டரி சங்க நிர்வாகி ஜோயல், சுவாசம் அறக்கட்டளை நிறுவனர் ரமேஷ் குழுவினர் உள்ளிட்ட  பலர் பங்கேற்றனர்ய தாஸ் நன்றி கூறினார்.ஏற்பாடுளை அம்பை நகர வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Related Stories: