சேர்ந்தமரத்தில் நடுரோட்டில் மின்கம்பத்தால் அடிக்கடி விபத்து

சுரண்டை,ஆக.7:  சுரண்டை அருகில் உள்ள சேர்ந்தமரத்தில் இருந்து கள்ளம்புளி வழியாக இடைகால் செல்லும் சாலை உள்ளது. சங்கரன்கோவிலில் இருந்து செங்கோட்டை வழியாக கேரளா செல்ல வியாபாரிகள் இந்த ரோட்டை பயன்படுத்துகின்றனர். இதனால் சாலையை அகல படுத்த பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ரோட்டை அகலப்படுத்தினர்.குறிகிய சாலையை அகலப்படுத்தும் போது மின்கம்பங்களை அகற்றி சாலையில் இருந்து இரண்டு மூன்று அடிதள்ளி மின்கம்பங்களை நடுவது தான் வழக்கம் ஆனால்  சேர்ந்தமரத்தில் இருந்து கள்ளம்புளி வழியாக இடைகால் செல்லும் சாலையில் மின் கம்பங்களை அகற்றாமல் அப்படியே சாலையை விரிவாக்கம் செய்துள்ளனர். இதனால் மின் கம்பம் நடு ரோட்டில் உள்ளது. அதுவும் வளைவில் இருக்கும் மின்கம்பத்தால் இரவு நேரத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மின் கம்பம் கீழே விழாமல் இருக்க போடப்பட்ட கம்பி இரவில் தெரிவதே இல்லை. எனவே ரோட்டில் உள்ள மின்கம்பத்தை உடனே அகற்றி ரோட்டில் இருந்து மூன்று அடி தள்ளி நட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்.

Related Stories: