யூரோ கோப்பை கால்பந்து நடப்பு சாம்பியன் தோல்வி

செவில்லா: பெல்ஜியத்திடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோற்ற  நடப்பு சாம்பியன் போர்ச்சுகள் தொடரில் இருந்து வெளியேறியது. யூரோ கோப்பை கால்பந்து தொடரில்  இப்போது  காலிறுதிக்கு முந்தைய  நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நடக்கின்றன. ஸ்பெயினில் உள்ள செவில்லா நகரில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில்  பெல்ஜியம்- போர்ச்சுகல் அணிகள் மோதின.  நடப்பு சாம்பியனுக்கு உரிய சிறப்புகளுடன் போர்ச்சுகல் அணி பெல்ஜியத்தை மிரட்டியது. அந்த அணி  24 முறை பெல்ஜியம் கோல் பகுதியை முற்றுகையிட்டு  கோலடிக்க முயன்றது. இப்படி எதையும் செய்ய முடியாத பெல்ஜியம் அணிதான் 42வது நிமிடத்தில்  கோலடித்தது.  அந்த அணியின் தாமஸ் மெயூனியர் தட்டித் தந்த பந்தை தவறாமல்   தோர்கன் ஹசார்ட்  கோலாக்கினார். அதன்பிறகு  பலமுறை வீரர்களை மாற்றியும், நட்சத்திர வீரர் ரொனால்டோ இருந்தும்  போர்ச்சுகளால் கோல் அடிக்கவே முடியவில்லை. அதனால் பெல்ஜியம் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது. நடப்பு சாம்பியன் போர்ச்சுகல் நாக் அவுட் சுற்றுடன் வெளியேறியது.பெல்ஜியம் அணி ஜூலை 3ம் தேதி நடைபெற உள்ள முதல் காலிறுதி ஆட்டத்தில்  இத்தாலியை எதிர்த்து விளையாட உள்ளது….

The post யூரோ கோப்பை கால்பந்து நடப்பு சாம்பியன் தோல்வி appeared first on Dinakaran.

Related Stories: