விசி நிர்வாகிகள் மீது வழக்கு

திண்டிவனம், ஜூன் 21: திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டில் உள்ள சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் மாலை மயிலம் ஒன்றிய வி.சி. கட்சி செயலாளர் வேந்தன் தலைமையில் 21 பேர் சாலைமறியலில் ஈடுபட்டனர். கடந்த மாதம் மரக்காணம் அருகே கந்தாடு கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலை அவமதித்ததை கண்டித்து இந்த மறியல் போராட்டம் நடந்தது. இதுதொடர்பாக 21 பேர் மீது மயிலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: