ஈமு கோழி மோசடி வழக்கில் இயக்குநருக்கு ரூ.2.83 கோடி அபராதம்

மதுரை: ஈரோடு மாவட்டம், பெருந்துறையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ஈமு கோழிப்பண்ணை நிறுவனத்தின் கிளை நெல்லையில் செயல்பட்டது. தங்களது பண்ணையில் முதலீடு செய்தால் மாதந்தோறும் அதிக லாபம் தருவதாக கூறி கடந்த 2012ல் பலரிடம் முதலீடு வசூலித்துள்ளனர். அதிக முதலீடுகளை வசூலித்த நிலையில் திடீரென நிறுவனத்தை மூடி தலைமறைவாகினர்.

இதுதொடர்பான புகாரின்பேரில் நெல்லை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், ஈமு நிறுவன மேலாண் இயக்குநர் மயில்சாமி, சக்திவேல் மற்றும் ஊழியர் பேச்சிமுத்து ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை, விசாரித்த மதுரை பொருளாதார குற்றங்களுக்கான சிறப்பு (டான்பிட்) நீதிமன்ற நீதிபதி கே.ஆர்.ஜோதி, மேலாண் இயக்குநர் மயில்சாமிக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை, ரூ.1.35 கோடி அபராதம், ஈமு நிறுவனத்திற்கு ரூ.1.35 கோடி அபராதம், சக்திவேலுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை, ரூ.13.51 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Related Stories: