எஸ்ஐயை கத்தியால் குத்திய போலீசுக்கு 5 ஆண்டு சிறை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவில் கடந்த 2015 பொங்கல் விழாவையொட்டி மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் தென்மண்டல போலீஸ் அணி, மத்திய மண்டல போலீஸ் அணி மற்றும் பல்வேறு ஊர்களை‌ சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன. இதில் தென்மண்டல போலீஸ் அணியின் பயிற்சியாளராக அப்போதைய விருதுநகர் ஆயுதப்படை எஸ்ஐ மோகன் பாபு கண்ணா இருந்தார். மத்திய மண்டல போலீஸ் அணியில் புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணம் போலீஸ்காரர் மாதவன் இடம்பெற்றிருந்தார்.

அணியிலிருந்து மாதவனை வெளியேற்றும்படி, எஸ்ஐ மோகன் பாபு கண்ணா கூறியதாக மாதவன் நினைத்துள்ளார்.‌ இதனால் ஆத்திரமடைந்த அவர் கத்தியால், மோகன் பாபு கண்ணாவை குத்தினார். இது குறித்து வத்தலக்குண்டு போலீசார் மாதவன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை திண்டுக்கல் முதன்மை சார்பு நீதிமன்ற நீதிபதி மீனா சந்திரா விசாரித்து, போலீஸ்காரர் மாதவனுக்கு 5‌ ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். மோகன் பாபு கண்ணா தற்போது சேலத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: