டோல்கேட் கட்டண உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள் கப்பலூரில் ஆர்ப்பாட்டம்

திருமங்கலம்: மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கப்பலூர் டோல்கேட்டில் நேற்று முதல் 10 சதவீத சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்கு வாகன ஓட்டுநர்கள், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். டோல்கேட் கட்டண உயர்வினை ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கம் சார்பில்  நேற்று கப்பலூர் டோல்கேட் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் சாத்தையா தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு ,சுங்கக்கட்டண உயர்வினை ஒன்றிய அரசு உடனடியாக ரத்து செய்யவேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

பள்ளிகொண்டாவில்: வேலூர் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கம், குடியாத்தம் லாரி, வேன் உரிமையாளர்கள் சங்கத்தினர் இணைந்து சுங்க கட்டண உயர்வை கண்டித்து பள்ளிகொண்டா சுங்கசாவடியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி டோல்கேட் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா பேசுகையில் தமிழகத்தில் 32 டோல்கேட்டுகள் காலாவதியாகி விட்டன. அவற்றை அகற்ற சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Related Stories: