காவேரிப்பாக்கம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆர்என்ஆர் ரக நெல் ₹1333-க்கு கொள்முதல்-கூடுதல் லாபம் கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி

காவேரிப்பாக்கம் :  காவேரிப்பாக்கம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆர்என்ஆர் ரக நெல் ₹1333-க்கு கொள்முதல் செய்யப்பட்டன.ராணிப்பேட்டை மாவட்டத்தில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியும், பேருந்து நிலையத்தின் மிகவும் அருகாமையிலும் அமைந்துள்ளது காவேரிப்பாக்கம் ஒழுங்குமுறை விற்பனை கூடம். இதில் காவேரிப்பாக்கம் பகுதி விவசாயிகள் மட்டுமன்றி கட்டளை, அய்யம்பேட்டைசேரி, உப்பரந்தாங்கல், மகாணிப்பட்டு, பன்னியூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளும் தங்கள் விவசாய நிலங்களில் அறுவடை செய்த நெல் மூட்டைகளை விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று நிலவரப்படி ஆர்என்ஆர் ரக நெல் அதிகப்பட்சமாக ₹1333-க்கு கொள்முதல் செய்யப்பட்டன. இதில் குறைந்த பட்சமாக ₹1223-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த ரக நெல் நேற்று முன்தினம்  ₹1240-க்கு கொள்முதல் செய்யப்பட்டன. இதனால் நேற்று முன்தினம் விலையை ஒப்பிடும் போது, நேற்றைய விலையில்  விவசாயிகளுக்கு  ஒரு மூட்டை மீது 93-ரூபாய்  அதிகரித்துள்ளது.இதேபோல் ஏடிடி 37-ரக நெல் ₹1067முதல் 935-வரை கொள் முதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த ரக நெல் நேற்று முன்தினம் அதிகபட்சமாக ₹1077-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் விவசாயிகளுக்கு நேற்று விலையில்  ஒரு மூட்டை மீது ₹10-குறைந்து நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

மேலும் கோ-51 ரக நெல் ₹1180-முதல் 1120-வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த ரகத்தில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக ₹1200-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் விலையை ஒப்பிடும் போது நேற்று விலையில் விவசாயிகளுக்கு ஒரு மூட்டை மீது ₹20-குறைந்துள்ளது.

 இதன்காரணமாக விவசாயிகள்  ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல்லின் ஈரப்பதத்தை உலர்த்தி வருகின்றனர். மேலும் காவேரிப்பாக்கம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு  விவசாயிகளின் வருகை அதிகரித்துக்கொண்டே வருகிறது.  இதனால் விவசாயிகளுக்கு தேவையான வசதிகள் செய்து தருவதாகவும்,  விவசாயிகள் விற்பனை செய்து வரும் நெல் மூட்டைகளுக்கு உடனுக்குடன் பட்டுவாடா செய்யப்படுவதாகவும் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சரிதா தெரிவித்தார்.கொள்முதல் நிலையத்தில், ஆர்என்ஆர் ரக நெல் அதிகப்பட்சமாக விலைபோனதாலும், உடனுக்குடன் பணம் வழங்கப்பட்டதாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து சென்றனர்.

Related Stories: