தமிழ்நாடு முழுவதும் வார்டு மறுவரையறை செய்யப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்..!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளில் ஒரே சீராக வார்டு மறுவரையறை செய்யப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். திருச்செங்கோடு நகராட்சிக்குபட்ட வார்டு எல்லைகளை மறுவரையறை அரசு முன்வருமா என ஈஸ்வரன் கேள்வி எழுப்பியிருந்தார். சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ. ஈஸ்வரன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்து பேசினார். அப்போது; தமிழ்நாடு முழுவதும் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளில் ஒரே சீராக வார்டு மறுவரையறை செய்யப்படும்.

வார்டு மறுவரையறை தொடர்பாக அதிகாரிகள் குழு அமைத்து அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். அதிமுக ஆட்சியில் தான் வார்டு மறுவரையரை குளறுபடி இருந்தது. கணவர் ஒரு வார்டிலும், மனைவி ஒரு வார்டிலும் நிற்பது போன்ற வரையறை அதிமுக ஆட்சியில் தான் உருவாக்கப்பட்டது. சென்னை, கோவை போன்ற மாநகராட்சிகளிலும் வார்டு எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என விளக்கம் அளித்தார். தொடர்ந்து பேசிய ஓபிஎஸ்; வார்டு மறுவரையரை செய்யும் போது பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

கணவர் ஒரு வார்டிலும், மனைவி ஒரு வார்டிலும், தந்தை ஒரு வார்டிலும் போட்டியிடுவதன் மூலம் குழப்பம் இருக்கிறது. கூட்டுக் குடும்பமாக இருப்பவர்களை ஒரே வார்டில் மறுவரையரை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு; மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டு மறுவரையரை செய்ய முதலமைச்சரிடம் அனுமதி பெற்றுள்ளோம் இவ்வாறு கூறினார்.

Related Stories: