வரும் 3ம் தேதி முதல் விற்பனை தேர்தல் பத்திரங்களை வெளியிட அனுமதி

புதுடெல்லி: தேர்தல் பத்திரங்களின் 26வது தொகுப்பை வெளியிட ஒன்றிய அரசு நேற்று அனுமதி அளித்தது. இவை வரும் 3ம் தேதி முதல் விற்பனைக்கு வர இருக்கிறது. தேர்தல் பத்திரம் என்பது அரசியல் கட்சிக்கு நன்கொடை செலுத்த விரும்பும் ஒருவர் அல்லது இந்தியாவில் செயல்படும் நிறுவனம், பாரத ஸ்டேட் வங்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளிலிருந்து வாங்க கூடிய  பத்திரமாகும். தற்போது கர்நாடக மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் 10ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனையொட்டி, தேர்தல் பத்திரங்களின் 26வது தொகுப்பை வெளியிட ஒன்றிய அரசு நேற்று அனுமதி அளித்தது. இவை வரும் 3ம் தேதி முதல் 12ம் தேதி வரை, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி உள்பட அங்கீகரிக்கப்பட்ட 29 கிளைகளில் விற்கப்பட உள்ளன. இதன் 25வது தொகுப்பு கடந்த ஜனவரி மாதம்  விற்பனைக்கு வந்தன.

Related Stories: