பேரையூர் அருகே வனப்பகுதியில் திடீர் தீ

பேரையூர்: பேரையூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு ஏராளமான விலங்கு, பறவை இனங்கள் தீயிக்கு இரையாகி அழிந்து வருகிறது. மேலும் மலையடிவாரங்களில் உள்ள ஓடை மற்றும் பள்ளங்களில் மயில் இறகுகள் குவிந்து கிடக்கின்றன. இது மயில்கள் இயற்கையாக இறந்து கிடந்தனவா? அல்லது கொல்லப்படுகிறதா? என புதிராகவே உள்ளது. நேற்று பேரையூர் அருகே சின்னப்பூலாம்பட்டி, பெரியபூலாம்பட்டி பகுதியிலுள்ள மேற்கு தொடர்ச்சி மலை வனத்தில் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

இந்த தீயின் அவல் தாங்க முடியாமல் முயல், குரங்கு உள்ளிட்ட விலங்குகள் இடம் பெயர்ந்து வருகின்றன. இந்த மலையடிவாரத்தில் உள்ள ஓடை மற்றும் பள்ளங்களில் மயில் இறகுகள் குவிந்து கிடக்கிறது. எனவே அனைத்து மலை வனப்பகுதிகளிலிலும் வனத்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என இப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: