நகை கொள்ளைப் போனதாக நாடகம் மேலாளர் உட்பட 3 பேர் கைது 3 கிலோ தங்கம் பறிமுதல்: போலீசார் அதிரடி நடவடிக்கை

சென்னை: சென்னை கன்ட்ரோல் ரூமிற்கு 2 நாட்களுக்கு முன்பு, ஒருவர் போன் செய்து அண்ணாநகர் ரவுண்டானா அருகே தன்னை தாக்கி ஒரு கும்பல் காரில் கடத்தி சென்றனர். அவர்கள் என்னிடம் இருந்த 3 கிலோ தங்க பிஸ்கெட்டுகளை கொள்ளையடித்துவிட்டனர் என்று தெரிவித்தார். ஆனால், ஆசிப் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதில், ஆசிப்(31), போரூரை சேர்ந்த விமல்ராஜ்(31) முகப்பேர் பகுதியில் உள்ள ஏ.ஆர்.டி. என்ற நகைக்கடை மேனேஜர் போரூரை சேர்ந்த சுபாஷ்(36) ஆகியோர் குறித்து போலீசார் விசாரித்தனர்.

மேலும், இக்கடை இயக்குனர்கள் ஆல்வின்ஞானதுரை மற்றும் ராபின் ஒரு லட்சம் கட்டினால் வாரந்தோறும் ரூ.3,000 மற்றும் மாதம் ரூ.12,000 ஆயிரம் தரப்படும் என்று வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலித்துள்ளனர். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வாடிக்கையாளர்கள் கட்டிய பணத்தை சரியாக நகைக்கடை உரிமையாளர்கள் கொடுக்கவில்லை என்று நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர், அந்த நகைக்கடை பூட்டப்பட்டது. சுபாஷ் ஒன்றரை கோடியும், ஆசிப் மற்றும் விமல்ராஜ் 60 லட்சம் டெபாசிட் செய்து, இயக்குனர் ஆல்வின்ஞானதுரை தரப்பினரை ஏமாற்றி வந்தனர். இதையடுத்து, இயக்குனர் ஆல்வின்ஞானதுரை பாரிமுனையில் 4 கிலோ தங்க பிஸ்கெட் ஆர்டர் செய்து இருப்பதாகவும், அதில் 3 கிலோ தங்க பிஸ்கெட் தயராக உள்ளதாக கூறினர். அதை ஆசிப்பிடம் வாங்கி வரச் சொல்லி அனுப்பினர்.

இந்நிலையில், ஆசிப்,  சுபாஷ், விமல்ராஜ் ஆகியோரிடம், ‘தான் 3 கிலோ தங்க பிஸ்கெட் பாரிமுனையில் இருந்து வாங்கி வர உள்ளதாகவும், ஆல்வின்ஞானதுரை டெபாசிட் பணத்தை நமக்கு தரமாட்டார். எனவே, இந்த தங்கத்தை நாம் எடுத்துக்கொள்ளலாம்’ என்று கூறினார். இதையடுத்து, ஆசிப், விமல்ராஜ், சுபாஷ் தன்னை தாக்கி 3 கிலோ தங்க பிஸ்கெட்டை கடத்தி சென்றதாக, அண்ணா நகர் காவல் நிலையத்தில் பொய் புகார் கொடுத்ததும்  தெரிய வந்தது.  இதையடுத்து, அவர் கொடுத்த தகவல்படி, அம்பத்தூர் பகுதியில் பதுங்கியிருந்த சுபாஷ், விமல்ராஜ் ஆகிய இருவரை கைது செய்து இவர்களிடம் இருந்து 3 கிலோ தங்க பிஸ்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்களை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: