சென்னை நிறுவனத்தின் மூலம் ரூ.5 கோடிக்கு சர்க்கரை பெற்று ‘எஸ்கேப்’: கொல்கத்தாவில் மோசடி தம்பதி கைது

சென்னை: சென்னை திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த விஜய்கார்த்தி கடந்த 2020ம் ஆண்டு மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், ‘‘கொல்கத்தாவை சேர்ந்த சஞ்சய்குமார் மற்றும் அவரது மனைவி பூனம் ஆகியோர், எங்கள் நிறுவனம் மூலம் ரூ.8 கோடிக்கு சர்க்கரையை கேட்டனர். அதன்படி, ரூ.8 கோடிக்கு மதிப்புள்ள சர்க்கரையை, ரயில் மூலம் கொல்கத்தாவுக்கு அனுப்பி வைத்தோம். சர்க்கரை மூட்டைகளை நாங்கள் பார்த்துக்கொள்வதாக சஞ்சய்குமார் மற்றும் அவரது மனைவி ஆகியோர் உறுதி மொழி கடிதம் வழங்கினர்.

அதன் பிறகு எங்களுக்குத் தெரியாமல் ரூ.5 கோடி மதிப்புள்ள சர்க்கரை மூட்டைகளை கொல்கத்தாவுக்கு எடுத்துச் சென்று விற்றுள்ளனர். ஆனால், அதற்கான ரூ.5 கோடியை எங்கள் நிறுவனத்திற்கு தம்பதியர் தராமல் ஏமாற்றி விட்டனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருந்தார். இந்த புகாரின்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில் ரூ.5 கோடி வரை மோசடி செய்தது உறுதியானது. அதைத்தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் தனிப்படையினர் மேற்கு வங்கம் சென்று சஞ்சய்குமார் (49) மற்றும் அவரது மனைவி பூனம் (40) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி போலீசார் சிறையில் அடைத்தனர்.

Related Stories: