மெய்நிகர் சேவை டிக்கெட் முன்பதிவு திருப்பதி தேவஸ்தான சர்வர் முடங்கியது

திருமலை: திருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல் மாதத்திற்கான மெய்நிகர் சேவை டிக்கெட் வெளியிடப்பட்ட நிலையில் அதிக அளவு பக்தர்கள் ஒரே நேரத்தில் பதிவு செய்ய முயன்றதால் சர்வர் முடங்கியது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல் மாதத்திற்கான மெய்நிகர் சேவை (விர்சுவல் சேவா) டிக்கெட் மூலம் தரிசனத்துக்கு ஒரு நாளைக்கு 5000 பக்தர்களுக்கு என   1.50 லட்சம்  டிக்கெட்டுகள் ஆன்லைனில் நேற்று காலை 11 மணிக்கு வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட உடனே அதிக அளவு பக்தர்கள், பதிவு செய்ய ஆன்லைனில் முயன்றதால் தேவஸ்தான சர்வர் முடங்கியது. உடனடியாக தேவஸ்தான தொழில்நுட்ப வல்லுநர்கள் சுமார் 20 நிமிடத்திற்கு மேல் போராடி தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்தனர்.  நேற்று டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் இன்று காலை 10 மணிக்கு திருமலையில் தங்குவதற்கான அறைகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Related Stories: