இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பல ஒப்பந்தங்கள் போடப்பட்டு இருந்தாலும் கூட, அவற்றை சீனா பின்பற்றுவதில்லை: இந்திய ராணுவ தளபதி பேட்டி

புதுடெல்லி: இந்தியா - சீனா இடையிலான எல்லைப் பிரச்னைகள் தொடரும் நிலையில், இரு நாட்டின் அதிகாரிகள் மத்தியில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. எல்லையில் இரு நாட்டு படைகளும் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்படுகிறது. ஆனால் சீனா தரப்பில், எல்லையில் தனது ராணுவத்தையும், ஆபத்தான ஆயுதங்களையும் குவித்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராணுவ தளபதி மனோஜ் பாண்டே அளித்த பேட்டியில், ‘சீனாவிடமிருந்து பல வகைகளில் ஆபத்துகள் வருகின்றன.

 சைபர் கிரைம் மூலம் பிற நாடுகளை உளவு பார்ப்பது போல், இந்தியாவையும் சீனா உளவு பார்க்க விரும்புகிறது. எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் மீண்டும் தனது ராணுவ பலத்தை சீனா அதிகரித்து வருகிறது. அருணாச்சலத்தின் தவாங்கில் அத்துமீறிய சீனாவின் நடவடிக்கைகளை முறியடித்தோம். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பல ஒப்பந்தங்கள் போடப்பட்டு இருந்தாலும் கூட, அவற்றை சீனா  பின்பற்றுவதில்லை. இருந்தும் இந்திய ராணுவம் எந்த நிலையிலும் தயார் நிலையில் உள்ளது’ என்றார்.

Related Stories: