அரசியல் பின்னணி இல்லாத அரைவேக்காடு அரசியல்வாதி: அண்ணாமலை மீது கே.எஸ்.அழகிரி கடும் தாக்கு

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கை: மார்ச் 23ம் தேதி காங்கிரஸ் நண்பர்களோடு கும்பகோணம் ரயில் நிலையம் வந்து ஓய்வு அறையில் பத்திரிகையாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் ராகுல்காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கிய செய்தியை அறிய நேரிட்டது. ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதற்கு உடனடியாக எதிர்வினையாக்குவது தான் எனது நோக்கமாக இருந்ததால் என்னோடு நான்கு பேர் இருக்கிறார்களா, நானூறு பேர் இருக்கிறார்களா என்பதைப் பற்றி கவலைப்படவில்லை. எனது முதல் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுமென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டேன்.

அந்த போராட்டம் தொலைக்காட்சிகளில் வெளியாகி தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய போராட்டங்களுக்கு தூண்டுதலாக  இருந்தது. இதை விமர்சிப்பதற்கு பாஜவினருக்கோ, மற்றவர்களுக்கோ என்ன அவசியம் இருக்கிறது. ராகுல்காந்திக்கு தண்டனை விதிக்கப்பட்ட உடனே என்னுள் பெருக்கெடுத்த உணர்ச்சியின் அடிப்படையில் தான் மறியல் போராட்டத்தை நடத்த முன்வந்தேன். இத்தகைய அரசியல் பின்னணி இல்லாத திடீர் அரசியல்வாதி அண்ணாமலை போன்ற அரைவேக்காடுகளுக்கு, என்னைப் போல உணர்ச்சியை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: