போலி நகைகளை அடகு வைத்து மோசடி; போலீஸ் காவல் விசாரணையில் பெண் தொழிலதிபர் பரபரப்பு வாக்குமூலம்: முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு அம்பலம்

காரைக்கால்: போலி நகைகளை அடகு வைத்த மோசடி வழக்கில் 3 நாள் கஸ்டடி நிறைவடைந்த நிலையில், காரைக்கால், தமிழக வங்கிகள், அடகு கடைகளில் போலி தங்க நகைகளை அடகு வைத்தும், விற்றும் கோடி கணக்கில் பணம் பெற்றது, யாருக்கெல்லாம் இதில் தொடர்பு என பெண் தொழிலதிபர் புவனேஸ்வரி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

காரைக்கால் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள வங்கிகள் மற்றும் நகை அடகு கடைகளில் செம்பு கம்பிகளில் தங்கம் முலாம் பூசிய போலி நகைகளை அடமானம் வைத்தும் விற்பனை செய்தும் பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான புதுச்சேரி காவல் துறையில் பணிபுரிந்த எஸ்ஐ ஜெரோம் ஜெசிமெண்ட், பெண் தொழிலதிபர் புவனேஸ்வரி, கூட்டாளியான ரிபாத் காமில், சோழன் உள்ளிட்ட 10 பேரை கைது ெசய்து புதுச்சேரி காலாப்பேட் மத்திய சிறையில் காரைக்கால் போலீசார் அடைத்தனர்.

இவர்கள் 4 பேரையும் ேபாலீசார் கஸ்டடி எடுத்து விசாரிக்க நேற்று வரை வரை 3 நாட்களுக்கு காரைக்கால் மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன்படி கடந்த 3 நாட்களாக ரகசிய இடத்தில் வைத்து 4 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். காவல்துறை அனுமதி முடிந்ததால் புதுச்சேரி மத்திய சிறையில் 4 பேரும் நேற்றிரவு அடைக்கப்பட்டனர்.

3 நாட்கள் நடந்த விசாரணையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வங்கிகள், அடமான கடைகளில் போலி நகைகளை அடகு வைத்தும், விற்றும் பல கோடி பெற்று மோசடியில் ஈடுபட்டதையும், இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என முக்கிய குற்றவாளியான புவனேஸ்வரி வாக்குமூலத்தில் ஒப்பு கொண்டதாகவும், நகை மோசடி குறித்து பல்வேறு திடுக்கிடும் பல தகவல்களை போலீசாரிடம் அவர் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் இதில் மேலும் சில முக்கிய புள்ளிகள் சிக்குவர் என கூறப்படுகிறது. மேலும், மோசடியில் ஈடுபட்ட நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட லேப்டாப், மொபைல் மற்றும் ஆவணங்களை வைத்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: