திருச்சில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக சீமான் மீது காவல்துறை வழக்குப்பதிவு

திருச்சி: நாம் தமிழர் கட்சி  ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி கண்டோன்மென்ட் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். நேற்று முன்தினம்(23-03-2023) திருச்சில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 500 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நான்கு பேரையும் விடுதலை செய்யக்கோரி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நேற்று முன்தினம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில் ஆர்ப்பாட்டமானது பொதுக்கூட்டம் போன்று மேடை அமைத்து நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசும்போது வன்முறையை தூண்டும் வகையில் அவதூறாக பேசியதாக சீமான் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் மீது சட்ட விரோதமாக கூடுதல், கலகம் செய்யத் தூண்டுதல், அமைதியை சீர்குலைக்க தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் திருச்சி கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories: