கோவையில் செம்மொழி பூங்கா அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் விரைவில் துவங்க உள்ளது: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

கோவை: கோவையில் செம்மொழி பூங்கா அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் விரைவில் துவங்க உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோவையில் மக்கள் சபை கூட்டங்களில், மோசமான சாலைகளை புதுப்பித்து தருமாறு அந்தந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, முதற்கட்டமாக இப்பணி துவக்கப்பட்டுள்ளது. கோவையில் மாநகராட்சி பகுதியில் ரூ.32 கோடி மதிப்பிலான சாலை, திட்ட பணிகளை துவக்கி வைத்தார்.

பின்னர் பேட்டியளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது: விரைவில் நிதி பெறப்பட்டு செம்மொழி பூங்கா அமைப்பதற்கான முதல்கட்ட பணிகள் துவங்கப்படும். மத்திய சிறை வேறு இடத்துக்கு மாற்றப்பட்ட பிறகு, ஏனைய பணிகள் நடைபெறும். ஒட்டுமொத்தமாக கோவை மாநகராட்சியில் மட்டும் 2 ஆண்டுகளில் ரூ.223 கோடி மதிப்பிலான சாலை பணிகள் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. அதில் தற்போது 70% பணிகள் முடிவடைந்துள்ளது. 120 கிலோ மீட்டர் தூரத்து பணிகளுக்கு முதலமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். ஒரே நேரத்தில் அதிகபட்சமாக சாலை பணிகள் நடப்பது இதுவே முதல்முறை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: