சோழிங்கநல்லூர் தொகுதியில் ஒருங்கிணைந்த வளாகம்: முதல்வருடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை.! அமைச்சர் மூர்த்தி பதில்

சென்னை: சோழிங்கநல்லூர் தொகுதியில் ஒருங்கிணைந்த வளாகம் அமைப்பதற்கு முதல்வருடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என சோழிங்கநல்லூர் எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் மூர்த்தி பதிலளித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, சோழிங்கநல்லூர் தொகுதி உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் (திமுக) பேசுகையில், “நீலாங்கரை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சொந்த கட்டடம் கட்ட அரசு ஆவன செய்ய வேண்டும். மேலும் இந்த தொகுதியில் வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்களும் தனியார் கட்டிடங்களில் செயல்பட்டு வருகிறது. எனவே சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து கட்டடங்களும் சொந்த கட்டிடம் கட்ட வேண்டும்’ என்றார்.

இதற்கு பதிலளித்து அமைச்சர் மூர்த்தி பேசுகையில், 100 ஆண்டுகள் பழமையான சார் பதிவாளர் கட்டிடங்களை புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதில் 2020-21 ஆண்டு 29 சார்பதிவாளர் அலுவலகங்களும், 2021-22 ஆண்டில் 50 அலுவலங்ககளும் புதிதாக கட்டுவதற்கான பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் உறுப்பினர் வைத்த ஒருங்கிணைந்த வளாகத்திற்கு நிலம் பெற்று தந்தால், முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து நிதி நிலைமைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Related Stories: