இந்தியன் ஆயில் நிறுவனத்தில் சிலிண்டர் வெடித்து ஊழியர் படுகாயம்

பொன்னேரி: மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சியில் அடங்கிய கரையான்மேடு பகுதியில் வசித்து வருபவர் குருபாதம்  (52).  இவர் அத்திப்பட்டு புது நகர் பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் எரிவாயு நிரப்பும் பகுதியில் ஒப்பந்த ஊழியராக உள்ளார்.  இங்கு, சுமார் 150க்கு மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிறுவனத்தில் இருந்து சிலிண்டர்களில் எரிவாயு நிரப்பி வீட்டு உபயோகத்திற்கு சென்னை உள்ளிட்ட வெளி பகுதிகளுக்கு லாரிகளில் எடுத்து செல்லப்படுகிறது.

நேற்று மாலை திடீரென காலாவதியான சிலிண்டர் வெடித்ததில் அதன் அருகே நின்று இருந்த ஒப்பந்த ஊழியர் குருபாதம் முகம், கை மற்றும் கால் பகுதிகள் படுகாயம் ஏற்பட்டது.

இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  உடனே, 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை திருவொற்றியூர் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் முறையான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என குற்றச்சாட்டு எழுப்பி உள்ளனர். இந்த விபத்து சம்பவம் தொடர்பாக இன்று பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட போவதாக ஒப்பந்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மீஞ்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: