கடலூர் அரசு கூர் நோக்கு இல்லத்தில் இருந்து தப்பி சென்ற 6 சிறார்களில் 2 பேர் மீட்பு..!!

கடலூர்: கடலூர் அரசு கூர் நோக்கு இல்லத்தில் இருந்து தப்பி சென்ற 6 சிறார்களில் இருவர் மீட்கப்பட்டுள்ளனர். கடலூர் சாவடி பகுதியில் அரசின் கூர் நோக்கு இல்லம் செயல்பட்டு வருகிறது. குற்றச்செயல்களில் ஈடுபட்ட 18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்கள் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் இங்கு உள்ளனர். இந்த நிலையில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு தங்க வைக்கப்பட்டிருந்த 6 சிறார்கள் நள்ளிரவில் கூர் நோக்கு இல்லத்தில் இருந்து சுவர் ஏறி குதித்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் கடலூர் புதுநகர் போலீசார் அவர்களில் இருவரை மீட்டுள்ளனர். எஞ்சியவர்களையும் மீட்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோன்று விழுப்புரம் அன்பு ஜோதி இல்லத்தில் இருந்து அழைத்து வரப்பட்டு கடலூர் தொண்டு நிறுவனத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 5 பேர் தப்பி ஓடிவிட்டனர். விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம வழக்கை சிபிசிஐடி போலீசார் தற்போது விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: