சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை: வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாப்பதற்காக, வனப் பாதுகாவலர் தலைமையில் தனிக்குழு அமைத்துள்ளது வரவேற்கத்தக்கது.
விளைபொருட்களை பாதுகாக்க, ரூ.22 கோடியில் ஒழுங்குமுறைக் கூடங்களுக்கு கூடுதல் கட்டமைப்புகள் மற்றும் விழுப்புரம், தஞ்சை, திருவண்ணாமலை, கடலூரில் பரிவர்த்தனைக் கூடங்கள், உலர்களங்கள், சேமிப்புக் கிடங்குகள் அமைத்தல் ஆகிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வேளாண்மை, தோட்டக்கலை பட்டம் பெற்ற 200 இளைஞர்களை தொழில்முனைவோராக்க, தலா ரூ.2 லட்சம் நிதியுதவி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க ரூ.6,536 கோடி ஒதுக்கீடு, கூடுதல் இணைப்புகளுக்கு இலவச மின்சாரம் வழங்குதல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு ரூ.11 கோடி மானியம் ஆகிய திட்டங்கள் வரவேற்கத்தக்கவை. பண்ணை சுற்றுலா செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வரவற்கதக்கது.