பல்வேறு பொறுப்புகளை வகித்த தன்னை விளக்கம் கேட்காமல் நீக்கியுள்ளனர்: வைத்திலிங்கம் தரப்பு வாதம்..!

சென்னை: பல்வேறு பொறுப்புகளை வகித்த தன்னை விளக்கம் கேட்காமல் தன்னை நீக்கியுள்ளனர் என வைத்திலிங்கம் தரப்பு வாதிட்டது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட 4 வழக்குகளும் பொறுப்பு தலைமை நீதிபதி குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜபாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

முதலில் ஓ.பி.எஸ். மற்றும் மனோஜ் பாண்டியன் தரப்பு வாதங்கள் முடிந்ததை அடுத்து, வைத்திலிங்கம் தரப்பு வாதங்களை முன்வைத்து வருகிறது. வைத்திலிங்கம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் மணிசங்கர்; பதவிகள் காலாவதியாகி விட்டதாக கூறும் போது முதலில் இரு பதவிகளையும் நிரப்பிய பிறகே ஒற்றைத் தலைமை குறித்து முடிவெடுக்க முடியும். ஒற்றை தலைமையை விரும்பினாலும், அதை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் முடிவு செய்ய வேண்டும். எந்த காரணத்துக்காகவும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாக இருக்க முடியாது.

பதவிகள் காலாவதியாகி விட்டதாக ஒருவர் கூற முடியாது. பொதுச்செயலாளருக்கு உள்ள அதிகாரங்கள் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களுக்கு வழங்கப்பட்டது. எம்எல்ஏ, அமைச்சர், மாநிலங்களவை உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகள் வகித்த வைத்திலிங்கத்தை விளக்கம் கேட்காமல் நீக்கியுள்ளார் என வாதிட்டார்.

Related Stories: