திருப்பதி அருகே போலீஸ் ரோந்து வனப்பகுதியில் வெட்டி கடத்திய 9 செம்மரக்கட்டைகள் பறிமுதல்

*ஒருவர் கைது; தப்பி ஓடியவர்களுக்கு வலை

திருமலை : திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை எஸ்.பி. சக்கரவர்த்தி உத்தரவின்படி டிஎஸ்பி முரளிதர் மேற்பார்வையில், ஆர்.ஐ.  சுரேஷ் குமார், ஆர்எஸ்ஐ சுரேஷ் பாபு குழுவினர், பக்ராபேட்டை வனச்சரகத்தில் உள்ள சாமலா கிழக்கு சரகத்தில் நாகபட்லா பிரிவில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அன்னதம்முல பண்டாவில் சிலர் செம்மரக் கட்டைகளை எடுத்துச் சென்ற நிலையில்  போலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர்.

இதில்   திருப்பதி அடுத்த பேரூர் சீனிவாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த சித்தராபு சீனிவாசலு  என்ற கடத்தல்காரனை கைது செய்தனர்.  அவருடன் வந்த ரேணிகுண்டா குர்ரகாலுவாய்  சேர்ந்த மணிகண்டா, கர்நாடகாவை சேர்ந்த வாசிம் ஆகியோர் தப்பி ஓடியது விசாரணையில் தெரியவந்தது.  அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.  சீனிவாசலு  மீது 5 செம்மரக்கடத்தல் வழக்குகள் உள்ள நிலையில் 205 கிலோ  எடையுள்ள 9 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ₹2.10 லட்சம் இருக்கும் என இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தெரிவித்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: