இரும்பு ஜாக்கிகள் திருடிய 5 பேர் கைது

ஆவடி: ஆவடியை அடுத்து பட்டாபிராம் வரதராஜபுரத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(32) இன்ஜினியராக வேலை செய்து வருகிறார். இவர் அரசு டெண்டர் வாயிலாக, பட்டாபிராம் அடுத்த அமுதூர்மேடு கிராமத்தில், ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடித்து விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். நேற்று காலை வேலைக்கு வந்தார். அப்போது, சைட்டில் வைத்திருந்த 10 இரும்பு ஜாக்கிகள் திருடு போனது தெரிந்தது.

புகாரின் பேரில் பட்டாபிராம் போலீசார் விசாரணை செய்ததில், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன்(19), திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன்(19) மற்றும் அருண்(20), திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த லாபான்(28), பூந்தமல்லி, பாரிவாக்கத்தைச் சேர்ந்த பாலகணேஷ்(26) ஆகியோர் திருடியது தெரிய வந்தது. போலீசார் இவர்களை கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: