குட்கா கடத்தியவர் கைது

ஸ்ரீபெரும்புதூர்:  தாம்பரம் அருகே சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டரம்பாக்கம் பகுதியில், தமிழக அரசால் தடை செய்யபட்ட போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஸ்ரீபெரும்புதூர் - குன்றத்தூர் நெடுஞ்சாலையில் காட்ரம்பாக்கம் கூட்டு சந்திப்பில், போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவழியாக அதிவேகத்தில் வந்த காரை போலீசார் மடக்கி பிடித்து சோதனையிட்டனர். இதில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், கூல்லீப் போன்ற போதை வஸ்துக்கள் மூட்டை மூட்டையாக விற்பனைக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.

பின்னர், 200 கிலோ குட்கா போதைப்பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று நடத்திய விசாரணையில்,  காட்ரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (27). இவர், அதே பகுதியில் மல்லிகை கடை நடத்தி வருவதும், அங்குள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு கூடுதல் விலைக்கு குட்கா பொருட்களை விற்பனை செய்ய கடத்திச் வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: