மக்களவையில் விவாதமின்றி துணைமானிய கோரிக்கை நிறைவேற்றம்

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் கூடுதலாக ரூ.1.48 லட்சம் கோடி செலவழிப்பதற்கான துணைமானிய கோரிக்கை விவாதமின்றி மக்களவையில் நேற்று நிறைவேறியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு கடந்த 13ம் தேதி தொடங்கியது. அப்போது, நடப்பு 2022-23ம் நிதியாண்டில் கூடுதலாக செலவழிக்க ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்து 508.89 கோடிக்கு ஒப்புதல் அளிக்க கோரும் துணை மானிய கோரிக்கையை  ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி தாக்கல் செய்தார்.

இந்நிலையில், மக்களவையில் நேற்று விவாதமின்றி ரூ.1 லட்சத்து 48 ஆயிரத்து 133  கோடி துணைமானியக் கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.  இதில் உரமானியத்துக்கு ரூ.36 ஆயிரத்து 325 கோடியும், தொலைத்தொடர்பு அமைச்சகங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ரூ.25,000 கோடியும், பாதுகாப்புத்துறை ஓய்வூதிய செலவினங்களுக்காக ரூ.33 ஆயிரத்து 506 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ராகுல், அதானி-மோடி விவகாரங்களால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கி வரும் நிலையில், மக்களவையில் நேற்று விவாதமின்றி துணைமானியக் கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Related Stories: