வெளிநாட்டு தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ளும் வகையில் விவசாயிகள் வெளிநாட்டில் பயிற்சி பெற ரூ.3 கோடி ஒதுக்கீடு..!!

சென்னை: வெளிநாட்டு வேளாண் தொழில்நுட்பங்களை தெரிந்து கொண்டு, நமது மாநிலத்தில் பின்பற்றும் வகையில் விவசாயிகள் வெளிநாட்டில் பயிற்சி பெற ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டசபையில் விவசாயிகளுக்கான தனி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்மைத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பின்னர் உரையை தொடங்கிய அமைச்சர்,  அயல்நாடுகளில் உயர் ரக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உற்பத்தி திறன் அண்ணாந்து பார்க்கும் நிலையில் இருக்கின்றது.

வெளிநாட்டு தொழில்நுட்பங்களை நம் விவசாயிகள் பார்ப்பதால் அவர்களுக்கு உற்சாகத்தை உண்டாக்கும். நாமும் அப்படி உற்பத்தி செய்ய முடியாதா என்ற ஏக்கத்தை ஏற்படுத்தும்; அது சாகுபடி தேக்கத்தை நீக்கி தேடலை உண்டாக்கும். 150 முன்னோடி விவசாயிகளை இஸ்ரேல், நெதர்லாந்து, தாய்லாந்து, எகிப்து, மலேசியா நாடுகளுக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. வெளிநாட்டில் பயிற்சி திட்டத்துக்கு ஒன்றிய, மாநில அரசின் நிதியில் இருந்து ரூ.3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

ரூ.1 கோடியில் பள்ளி மாணவர்களுக்கு பண்ணை சுற்றுலா:

வேளாண்மையின் மகத்துவத்தை பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்வதற்காக பண்ணை சுற்றுலாத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து மாணவர்களுக்கான பண்ணை சுற்றுலாத் திட்டத்தை செயல்படுத்த ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Related Stories: