நிலத்தடி நீர் அதிகரிப்பு. 119 லட்சத்து 97 ஆயிரம் மெட்ரிக் டன் உணவு உற்பத்தி செய்து தமிழ்நாடு சாதனை :அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் உரை!!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் 2023-24ம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை இன்று (21ம் தேதி) காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது .இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் கூடியதும், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 2023-24ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை தாக்கல் செய்தார். வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த 3வது வேளாண்மை பட்ஜெட் ஆகும்.

வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த பின் உரை நிகழ்த்திய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்,

எத்தனை தொழில்கள் செழித்து வளர்ந்தாலும் மனிதனின் அடிப்படை தேவை உணவு ஆகும்.இயற்கையோடு ஆடக்கூடிய கண்ணாமூச்சி ஆட்டமாக வேளாண்மை மாறியிருக்கிறது.விளைநில பரப்புகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன.தானியங்கள் மட்டும் அல்ல காய்கறிகள் பழங்கள் போதிய அளவில் உற்பத்தி செய்து ஊட்டசத்தை பாதுகாப்பது அவசியம். விளைநிலங்கள் அளவு குறைந்து வருகிறது; எனவே உற்பத்தி அதிகரிக்க வேண்டியது அவசியம்.புன்செய் நிலங்களுக்கும் உரிய பயிர்களை அறிமுகம் செய்ய வேண்டிய தேவை உருவாகியுள்ளது.

வேளாண்மை செழித்து வளரும் திட்டங்களை வகுக்க தனி பட்ஜெட்டை அரசு உருவாக்கி உள்ளது. உழவர்கள் எண்ணற்ற சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர் .நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதிக மகசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் சாகுபடி பரப்பு 1.93 லட்சம் ஹெக்டேர் அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சாகுபடி பரப்பு 53.48 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் நிலத்தடி நீரின் அளவு அதிகரித்துள்ளது. ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டதால் தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளில் 1.5 லட்சம் விவசாய ,மின் இணைப்பு வழங்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது. டெல்டாவில் 5.36 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. வறட்சி, வெள்ள பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் பயிர் ரகங்களை உருவாக்க வேண்டியது அவசியம். 2020-2021; ஒப்பிடுகையில் 2021-2022ல் வேளாண் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம், நேரடி நெல் கொள்முதல் மட்டுமின்றி, பயறு, கொப்பரைத் தேங்காயும் கொள்முதல் செய்யப்படுகிறது. குளிர்பதன கிடங்கு, உலர் கலம் , தானிய பாதுகாப்பு கிடங்குகள் போதுமான அளவு அமைக்கப்பட்டன. ரூ.1695 கோடி அளவிற்கு பயிர் காப்பீடு மானியமாக 6 லட்சம் விவசாயிகளுக்கு மேல் வழங்கப்பட்டது.வரும் நிதியாண்டில் 127 மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்ய இலக்கு.2021-2022ஆம் நிதியாண்டில் 185 வேளாண் பட்டதாரிகளுக்கு தலா 1 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.2504 கிராமங்களில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.230 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 119 லட்சத்து 97 ஆயிரம் மெட்ரிக் டன் உணவு உற்பத்தி செய்து தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது, இவ்வாறு அவர் பேசினார்.  

Related Stories: