முதல்வர் பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் 28வது வட்ட திமுக சார்பில்,  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு ஏழைகளுக்கு 3 தையல் மெஷின், இஸ்திரி பெட்டி, மாணவ, மாணவர்களுக்கு விளையாட்டு சாதனங்கள், 500 பேருக்கு பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி காஞ்சிபுரம் டோல்கேட் பகுதியில்  நேற்று முன்தினம் நடந்தது. காஞ்சிபுரம் பகுதி செயலாளர் கே.சந்துரு தலைமை தாங்கினார்.  

மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ  ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ எழிலரசன், மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார். முன்னதாக, 28வது வார்டு கவுன்சிலர் கமலக்கண்ணன் வரவேற்றார். இதில், மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம்,  பகுதி செயலாளர்கள் தசரதன், திலகர், வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். வட்ட செயலாளர் சுகுமாரன் நன்றி கூறினார்.

Related Stories: