உத்திரமேரூர் அருகே மின் கசிவால் கூரை வீட்டில் தீ

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த காவனூர்புதுச்சேரி கிராமத்தில் வசிப்பவர் விவசாயி ஆறுமுகம் (65). இவரது, மனைவி வசந்தா. இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இவர், திருமணமாகி தனது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். இதனால், விவசாயி ஆறுமுகம், அவரது மனைவி ஆகிய இருவரும் தனிமையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை ஆறுமுகம் உடல் நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்துள்ளார். மனைவி வசந்தா நூறுநாள் வேலைக்கு சென்றிருந்தார்.

இந்நிலையில், விவசாயி அறுமுகம் வீட்டில், மின் உபகரணங்கள் பழுதடைந்திருந்த நிலையில், நேற்று அதிகாலையில் பெய்த கனமழை காரணமாக மின்கசிவு ஏற்பட்டு, கூரை வீடு தீப்பிடித்து எரிய துவங்கியது. இதைகண்ட அக்கம் பக்கத்தினர்  விரைந்து வந்து வீட்டினுள் இருந்த ஆறுமுகத்தினை மீட்டு, தீயை அனைத்தனர். இந்த தீ விபத்தினால், வீட்டில் இருந்த சுமார் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இது குறித்து, கிராம மக்கள் உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று, இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: