அதிமுகவுக்கு துரோகம் செய்தவர் ஓபிஎஸ்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னை: அதிமுகவுக்கு துரோகம் செய்தவர் ஓ.பன்னீர் செல்வம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: ஓபிஎஸ் தரப்பினர் காயகல்பம் கம்பெனி, இந்தக்கம்பெனி நேற்றைய தினம் ஓபிஎஸ், பண்ருட்டி ராமச்சந்திரன் அளித்த பேட்டிகள் விரக்தியின் உச்சம், விரக்தியின் விளிம்பாக தான் பார்க்க வேண்டும். அரசியலில் பண்பாடு இருக்க வேண்டும். பல்வேறு விதமான வார்த்தைகள் பிரயோகிக்கும் போது அவர்கள் நிதானமாக தான் இருக்கிறார்களா, நிதானத்ைத இழந்து பேசுகிறார்களா என்று தொண்டர்கள், மக்கள் பார்க்கிறார்கள். பிக்பாக்ெகட் என்று கூறுகிறார்.

உண்மையில் அவர் தான் பிக்பாக்கெட் என்பதற்கு பொறுத்தமானவர். அதிமுக கட்சி அலுவலகத்தை ஓபிஎஸ் தலைமையில் குண்டர்களுடன் வந்து சூறையாடியது அது தான் பிக்பாக்ெகட் ஆகும். அதற்காக நீதிமன்றம் சென்று நீதி நிலைநாட்டி கிரிமினல் வழக்கு போடப்பட்டுள்ளது. பதவி வெறிபிடித்து முன்னாள் அமைச்சர்களிடம் பொறுப்புகளை பிடுங்கினார். அது தான் பிக்பாக்கெட். கட்சி நலனுக்காக எந்தகாலத்திலாவது செயல்பட்டுள்ளாரா? பெரியகுளத்தில் டிடிவி தினகரன் எம்பி தேர்தலில் நிற்கவில்லை என்றால் ஓ.பன்னீர்செல்வம் யார் என்று தெரிந்திருக்காது. ெஜயலலிதா மரணத்தில் விசாரணை கமிஷன் கேட்டது ஓபிஎஸ் தான், ஆணையம் பலமுறை சம்மன் அனுப்பியும், ஆஜராகாமல் இறுதியில் தான் ஆஜரானார்.

கடைசியில் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இல்லை என்று கூறிவிட்டார். கடந்த மக்களவை தேர்தலில் தன் மகனை வெற்றி பெற வைக்க பல கோடி செலவு செய்தவர். கட்சிக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டவர். அதிமுகவுக்கு துரோகம் செய்தவர் ஓ.பன்னீர் செல்வம் தான். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைத்துக் கொடுத்த அரசை கலைக்க நினைத்தவர். பண்ருட்டி சென்று எந்த கட்சியாவது உருப்படியானது இல்லை. எவ்வளவு பணம் வாங்கினார் என்று தெரியவில்லை, வாங்கிய பணத்துக்கு ஓபிஎஸ் கைக்கூலியாக செயல்படுகிறார்.

சசிகலா குடும்பத்தினர் கட்சிக்குள் வரக்கூடாது என்று கூறியவர் ஓபிஎஸ் தான், மகாபாரதத்தில் சகுனி எப்படியோ அதைப்போன்று அரசியலில் சகுனி பண்ருட்டி ராமச்சந்திரன். பண்ருட்டி ராமச்சந்திரன், ஓபிஎஸ் ஆதரவாளர்களை விரக்தியின் விளிம்பாகவே பார்க்க முடிகிறது. கட்சியானது எடப்பாடி தலைமையில் எழுச்சியோடு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: