பெங்களூரு: பெங்களூருவில் கேல் நிறுவனத்தின் சார்பில் காஸ் இணைப்பு கொடுக்கும் பணி நடக்கிறது. நேற்று காலை எச்.எஸ்.ஆர்.லே அவுட் பகுதி மதீனா மசூதி அருகில் பெங்களூரு மாநகராட்சி சார்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டியபோது, கேல் நிறுவனம் அமைத்திருந்த காஸ் பைப் லைன் பழுதாகி காஸ் கசிந்து மசூதி அருகில் வசிக்கும் ஜமீர் அகமது என்பவர் வீட்டில் காஸ் கசிந்து சிலிண்டர் வெடித்தது. இதில் லைகா அஞ்சும் (45), முபாசிரா (40) உள்பட 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களை உடனடியாக விக்டோரியா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
