தந்தையால் பாலியல் தொல்லை விவகாரம் மகளிர் ஆணைய தலைவியை ‘நார்கோ டெஸ்ட்’ செய்ய வேண்டும்: மாஜி கணவர் வெளியிட்ட பகீர் தகவல்

புதுடெல்லி: தனது தந்தையால் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக கூறும் டெல்லி மகளிர் ஆணைய தலைவியை நார்கோ டெஸ்டுக்கு உட்படுத்த வேண்டும் என்று அவரது முன்னாள் கணவர் கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லி மகளிர் ஆணையத் தலைவி சுவாதி மாலிவால் கடந்த சில தினங்களுக்கு முன் ெவளியிட்ட பதிவில், ‘நான் சிறுமியாக இருந்த போது எனது தந்தை எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அவர் என்னை அடித்தார். அதனால் நான் கட்டிலுக்கு அடியில் சென்று படுத்துக் கொண்டேன்’ என்று தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்து பதிவிட்டிருந்தார். இந்நிலையில், சுவாதி மாலிவாலுக்கு ‘நார்கோ டெஸ்ட்’ (உண்மை கண்டறியும் சோதனை) நடத்த வேண்டும் என்று அவரது முன்னாள் கணவர் நவீன் ஜெய்ஹிந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், ‘சுவாதி மாலிவால் கூறியது அனைத்தும் பொய்; அதில் எவ்வித உண்மையும் இல்லை. அவரது தந்தை தன்னையும் தனது சகோதரியையும் அடிப்பார் என்று என்னிடம் கூறியிருந்தார். ஆனால், தனது தந்தை தன்னை பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் ஒருபோதும் என்னிடம் கூறவில்லை. இப்போது அவளுடைய தந்தை இந்த உலகில் இல்லை; அவரால் நீதிமன்றத்திற்கு வர முடியாது. அதனால் அவர் மீது சுவாதி கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது. மிகப்பெரிய பதவியில் இருப்பதால் அவர் இவ்வாறு கூறுகிறார். அவரை ‘நார்கோ டெஸ்ட்’ செய்ய வேண்டும். ஒருவேளை அவரது தந்தையால் அவர் பாதிக்கப்பட்டிருந்தால், அவருக்கு மனநல பரிசோதனை செய்து உரிய ஆலோசனைகள் வழங்க வேண்டும்’ என்றார்.

Related Stories: