ஹப்பூர்: உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் வசிக்கும் போலீஸ் கான்ஸ்டபிள் அங்கித் குமார் (25) என்பவர், கடந்த பிப்ரவரியில் மொராதாபாத்தில் இருந்து ஹாப்பூர் போலீஸ் லைனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் ஹாப்பூர் போலீஸ் லைனில் பணியில் இருக்கும் போது, தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
