தேர்தலுக்கு பின் வன்முறை திரிபுராவில் எம்பிக்கள் குழு மீது தாக்குதல்: 3 பேர் கைது

அகர்தலா: திரிபுராவில் தேர்தலுக்கு பின் நடந்த வன்முறை தொடர்பாக ஆய்வு நடத்த சென்ற எம்பிக்கள் குழு மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். திரிபுரா மாநிலத்தில் கடந்த 2ம் தேதி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படடது. பாஜ-இடது சாரி கட்சி கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தது. இந்நிலையில் தேர்தலுக்கு பின்பு இங்கு வன்முறை வெடித்தது. குறிப்பாக சேபாஹிஜலா மற்றும் கோவாய் மாவட்டங்களில் வன்முறை சம்வங்கள் நிகழ்ந்தன. வன்முறை குறித்து இடதுசாரி, காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது.

நேற்று முன்தினம் நேஹல்சந்திராநகரில் ஆய்வுக்கு வந்த எம்பிக்கள் குழு மீது மர்ம கும்பல்  திடீரென தாக்குதல் நடத்தியது. பாரத் மாதா கி ஜே என்ற முழக்கத்துடன் எம்பிக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் அங்கு இருந்த ஒரு வாகனம் கடும் சேதமடைந்தது. மேலும் இரண்டு கார்கள் சூறையாடப்பட்டது. இந்த சம்பவத்தில் எம்பிக்கள் யாருக்கும் காயமடையவில்லையென்றாலும் அவர்களது வாகனங்கள் சேதமடைந்தன. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் தொடர்புடைய 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

* நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்

எம்பிக்கள் குழு மீது தாக்குதல் தொடர்பாக குழுவில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் மாநிலங்களவை எம்பி இளமாரம் கரீம் அகர்தலாவில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘திரிபுராவில் தேர்தலுக்கு பின் ஏற்பட்ட மோதல்கள் மற்றும் வன்முறைகளை தீவிரமாக கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தை நாட்டு மக்களுக்கும் தெரிவிப்பதற்காக நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை எழுப்புவோம். மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதோடு அவர்களது வாழ்வாதாரங்களும் அழிக்கப்பட்டுள்ளது” என்றார்.

Related Stories: