பாரதிபுரம் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை: பொதுமக்கள் கோரிக்கை

உத்திரமேரூர்: பாரதிபுரம் கிராமத்தில், பகுதி நேர ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். உத்திரமேரூர் அடுத்த பாரதிபுரம் கிராமம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி, மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க சுமார் 4 கிமீ தொலைவில் உள்ள மேனல்லூர் கிராமத்தில் உள்ள ரேஷன் கடைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், பொதுமக்கள் 4 கிலோமீட்டர் தொலைவிற்கு சென்று, ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டு நடந்தே வீட்டிற்கு வர வேண்டிய நிலை உள்ளது.  இதனால் முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் ரேஷன் கடைக்கு சென்று, பொருட்கள் வாங்கி வருவதில் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதனால், பாரதிபுரம் கிராமத்தில் பகுதிநேர ரேஷன் கடை வேண்டும் என பல்வேறு அதிகாரிகளுக்கும் புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகத்தினர் தலையிட்டு பாரதிபுரம் கிராமத்தில் புதிய பகுதி நேர ரேஷன் கடை திறக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: