கோத்தகிரி: கோத்தகிரி அருகேயுள்ள வள்ளுவர் நகர் பகுதியில் பகல் நேரத்தில் குடியிருப்பு நிறைந்த பகுதியில் உலா வந்த ஒற்றை கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்து ஓட்டம் பிடித்தனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கடந்த 2 மாதமாக கொட்டிய கடும் பனிப்பொழிவால் வனப்பகுதியில் உள்ள செடி, கொடிகள் கருகியது. இதனால் யானை, மான், கரடி, காட்டு மாடுகள் உள்ளிட்டவை உணவு, குடிநீர் தேடி குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால், மனித- விலங்கு மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
