திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசி திருவிழாவில் ஊஞ்சல் உற்சவம்

திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் ஊஞ்சல் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த மாதம் 21ம் தேதி கொடியேற்றத்துடன் மாசித் திருவிழா துவங்கியது.  தினந்தோறும் மண்டகப்படிதாரர்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் மாலையில் கலைநிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

நேற்று இரவு 8 மணிக்கு அம்மன் ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை 6 மணிக்கு அம்மன் சயன கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். தெப்பதிருவிழாவுடன் மாசி பெருந்திருவிழா நிறைவடைகிறது.

Related Stories: